முதல் அடி சதுரகிரி

புதுச்சேரி to சதுரகிரி  பயணம்


    ( அனைத்தும் அனுபவ தகவல்களும் படத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பயணம் செய்பவர்கள் பார்க்க வேண்டிய தளம். பயணம் செய்யாதவர்களும் பார்த்து ரசிங்கப்பா...)

         மதுரைக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூர்க்கும் இடையில் உள்ள கிருஷ்ணன் கோவில் bus stop-ல் இறங்கிய நேரம் 5.15 am. இறங்கிய உடனே தாணிபாறைக்கு  செல்லும் பேருந்து வந்தது.பயண கட்டணம் 11 ரூபாய்.



தாணிபாறை மலை அடிவாரத்திற்கு வந்தவுடன் எடுத்த படம் 

             காலை கடனை மலையின் அடிவாரத்தில் உள்ள கழிப்பகத்திலே முடித்து விட்டு செல்லவும். ஊர் விட்டு ஊர் போய் மலையை கெடுக்காதீங்கப்பா....




சதுரகிரி நுழைவு வாயில்


          இனி ஏறப்போரோம்.....படத்த பார்த்தாலே புரியும்.....இடைஇடையே....பல உபயோக தகவல்கள். முழுவதும் பார்க்கவும்.....படிக்கவும்....



 

சுமை தூக்கிகள்- உழைப்பாளர்கள்




வத்ராப் செல்ல மினி பஸ் நேர அட்டவணை




அன்ன தானம் அடிவாரத்தில்- சுவையான தக்காளி சாதம் போட்டாங்கப்பா...






          இந்த நீர் அருவிய பார்த்து  ரசிங்க.....  ஆனா...பார்த்த உடனே குளிக்காதீங்க... மேல போய்.......... வரும்  நீர் நல்லா இருக்கானு பார்த்துட்டு குளிங்க...... மனிதனா இல்லை சரக்கு பெட்டகமானு தெரியல....நிறைய நீர் வரும் போது  குளித்தல்... நல்லது.

எப்ப வரும்?.... மழை காலம் முடிந்து ஒரு மாதம் சென்ற பின் வரும்..... செல்லவும்...







































உச்சியிலும் குளிக்கிறார்கள்......


இப்படம் கோரக்கர் சித்தர் இருந்து தவம் செய்த குகையாக கூறப்படுகிறது. குகையின் படம் கீழே.....






  

குகைக்கு அருகில் எங்கள் குழு ஒய்வு எடுத்துக்கொண்டது...அப்பொழுது விளையாட்டாக சில கிளிப்புகள்

















பயணம் தொடர்கிறது....

இரட்டை மகாலிங்கம்.....






நாவல் உற்று.... கிழே உள்ள பலகையை படிக்கவும்... தெரிந்துகொள்ளவும்





            பாதி மலையை ஏறிய பிறகு மரத்தில் எழுதி இருந்த செய்தி...தேனியில் இருந்து வருபவர்கள் இந்த வழியில் தான் வருவார்களாம்........





















சரியான வழி சலிப்பை தந்ததால் ஆற்று வழியில் செல்ல முடிவு எடுத்தோம்...இதன் பிறகு ஆற்று வழி......கிளிப்புகள் கீழே...










பிறகு ஆற்று வழியில் இருந்து மேல் ஏறி சரியான பாதையில் வந்தோம்....
ஆற்று வழி பாதையை ஒட்டியே செல்லும்....


கீழே இருந்து தவசி பாறை அதோ உள்ளது என்று பாத சாரி ஒருவர் கூறியதால் எடுத்த கிளிக்...உண்மையும் அதுவே....


கோவில் நெருங்கிய போது எடுத்த படம்...
கிழே உள்ள படியை ஏறியவுடன் சிவனை தரிசிக்கலாம்......

    ஆற்றுப்படுகை வழி நெடுகிலும் அசுத்தமாக இருந்ததால் எங்களுக்கு........ ....குளிக்க மனம் வரவில்லை...குளிக்காமல் சிவனை தரிசிக்க கூடாது என முடிவு எடுத்து ஆற்றின் உச்சியை நோக்கி புறப்பட்டோம்....வாழ்க்கைனா ஒரு திரிலிங் வேணுமிலா.....


ஒரு வழியாக  குட்டியான தண்ணீர் தேங்கி வழிந்தோடியதை கண்டோம்..

   இதற்கு மேல் சென்று பார்க்கலாம் என்று போனால் ஆற்று படுக்கையே காணவில்லை. இந்த சிறிய நீருற்றா இப்படி கீழே அருவியாக கொட்டுகிறது என்பதைக்கண்டு மெய் சிலிர்த்தோம்....இதற்கே இப்படி என்றால்....... மழை வந்தால்.... தண்ணீர் சுத்தமானது என்பதை காட்டும் நன்னீர் தாவரங்கள் உள்ளதையும் பார்க்கலாம்.



கீழே உள்ளது பரணிச் செடி நண்பர் கூறியது....


 குளித்தவுடன் சந்தன மாகாலிங்கத்தை தரிசித்தோம். படம் எடுக்க கூடாது என்று அங்கிருந்து எங்களை எச்சரிக்கை செய்வதை பார்க்கலாம். பேச்சு கொடுத்துக்கிட்டே எடுத்துட்டோம்லல......



கோவிலுக்கு வந்துவிட்ட களைப்பில் எடுத்தப் படம்



       படுத்துக்கொண்டே பார்த்தால் தவசிப் பாறை...இதில் ஏற கீழே உள்ள சுந்தர மகாலிங்க கோவிலுக்கு சென்று அதன் பின்புறம் வழியாக ஏற வேண்டும்.....வழியில் ஒருவர் கூறியது......மேலே ஏற இரண்டு வழிங்க....... நேராக ஏறினால் 45 நிமிடம், ஆனால் பாதை கரடு முரடானது..சுற்றி ஏறினால்
2 மணி நேரம் ஆகும்  வழி சமமாக இருக்கும். களைப்பு மிகவும் இருந்ததால் ஏற வேண்டாம் என்று முதலில் நினைத்தோம்...ஆனால் பயணம் முழுமை பெறாது என்பதால் கரடு முரடான பாதையை தேர்ந்தெடுத்தோம்.  இருள் வருவதற்குள் ஏறி இறங்கி விட வேண்டும்.....இருள் சூழ  இன்னும் 2 மணிநேரமே உள்ளது...விரைவாக ஏற முற்பட்டோம்..... எல்லாமே திர்லிங் தாங்க.......









வழி நல்லா தானா இருந்தது......



இதில் இருந்து......... கரணம் தப்பினால் மரணம் தான்..அடர்ந்த புல் தான் பிடிப்பு......



             ஒருவழியாய் தவசி பாறை வந்து சேர்ந்து...சோர்ந்து விட்டோம்........  பாறைக்கு அடியில் உள்ளது ஒரு குகை. அதற்குள் நுழைய தான் இவள்ளவு கூட்டம். கூட்டத்திற்கு காரணம் பவுர்ணமி நாள். அங்கு சிவனை பூஜை செய்கிறார்கள்.


வழியில் ஒருத்தர் மேல ஏ.சி பாறை இருக்குன்னு சொன்னாரு....அதை தேடி

மேலும் எறினோம்





மேலே உட்கார்ந்து இளைப்பாரினோம்....








கொஞ்சம் தைரியம் ஜாஸ்தி தான்


       தவசி பாறைக்கு மேல் நவகிரகங்கள் போல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒன்பது பாறைகள். இதை மக்கள் சுற்றிவரும் போது எடுத்த கிளிக்... ரொம்போ ரிஸ்க் எடுக்கிறாருபா....


இது தான் இரண்டாவது வழி மலை மேல போய் கீழே  வருகிறது


         நாங்க வந்த வழியிலே இறங்கிட்டோம். ஏனா....எப்பயுமே எங்கப் பாத சிங்கப்பாத... ரிஸ்க்குலாம் எங்களுக்கு ரஸ்க்கு சாப்பிடற மாதிரி.......கால் நடுங்கனாலும் காட்டிக்காம் விரப்பா வீரமா நிப்போம்ல....








எங்கள் பயணம் முடிவுக்கு வந்தது..... இறுதி கருத்து வீடியோவில் பார்த்து கொள்ளவும்.



       எங்க ஏ.சி. பாறை என்று கேக்கறது தெரிகிறது....அங்கு அருகில் தான் இருக்கிறது. கேமராவில் சார்ஜ் தீர்ந்து விட்டதால்....எடுக்க முடியவில்லை.. மீண்டும் அடுத்த trip - ல் சந்திக்கிறோம்.
நன்றி....

புதுச்சேரி ட்ரிக்கர்ஸ்

5 comments:

Saravanakumar Karunanithi said...

Hi,
Thanks for the information , I also need to go like this, Can I also join with you when you are going next time for trekking? I am from Chennai, Can u please contact me via email? my email id is akk.saravanakumar@gmail.com
Thanks in Advance

காவேரிகணேஷ் said...

FANTASTIC SNAPS, GOOD DRIVE, KEEP IT UP

THIAGU said...

உங்கள் வருகைக்கு நன்றி சரவணன்குமார்.

THIAGU said...

காவேரிகணேஷ்-தங்கள் கருத்துக்கு நன்றி.
பயணம் தொடரட்டும்

Ravi kumar Karunanithi said...

Nice trip and Thrilling Trip. me also wants to go sadhuragiri hills. but time is not yet come. here saravanakumar karunanithi is my brother. thanks for good information.

Post a Comment